ஹர்பால் சிங் பஜாஜ்

மூத்த வக்கீல்

1999ல் சிங்கப்பூரின் ஒரு வழக்கறிஞர் & வழக்குரைஞராக அனுமதிக்கப்பட்ட ஹர்பால் சிங்குக்கு 21 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அவர் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து இளநிலைச் சட்டப் பட்டத்தைப் பெருமை நிலையுடன் பெற்றார், 1997ல் ஆங்கிலப் பாருக்கு அழைக்கப்பட்டார்.

கடந்த பல ஆண்டுகளில், ஹர்பால் சிங் பலவிதமான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் சில: குடிமையியல் & வணிக வழக்கு, தனிப்பட்ட காய வழக்கு (அதாவது, சாலைப் போக்குவரத்து விபத்துகள், தொழிற்சாலை விபத்துகளால் எழும் காயக் கோரிக்கைகள், பணிக் காயக் கோரிக்கைகள்), பெருநிறுவனச் சட்டம், உயில் நிரூபித்தல் & நிர்வகித்தல், காப்பீட்டுச் சட்டம், குடியேற்றச் சட்டம், பணி சார்ந்த முரண்கள், குடும்பச் சட்டம் மற்றும் குடிமையியல் சட்டம்.

பல வகை விபத்துகளில் காயப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நீதி வழங்குவதில் ஹர்பால் சிங்குக்குச் சிறப்பு ஆர்வம் உள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்கள் பல நேரங்களில் சிங்கப்பூர் சட்டங்களை அறிந்திருப்பதில்லை என்பதால், இவருடைய அனுபவத்தில், விபத்தை சந்தித்தவர்களை தங்களுடைய சட்ட உரிமைகளைப்பற்றித் தவறான ஆலோசனை வழங்கப்பட்ட மற்றும் தவறு செய்த பணி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட ஊழியர்களை இவர் சந்தித்து அந்த ஊழியர்களுடைய நீதிக்காகப் போராடுகிற ஆர்வம் மிக்க வழக்கறிஞராக அறியப்பட்டுள்ளார்.

ஹர்பால் சிங் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உறுதியுடன் செயல்படுகிறவர்.

ஹர்பால் சிங் திருமணமானவர். இவருக்கு இரண்டு வளர்ந்த பதின் பருவ மகன்கள் உள்ளார்கள். இவர் தன்னுடைய குடும்பத்துடன் தரமான அளவு நேரத்தைச் செலவிடுவதையும் பிற நாடுகளுக்குப் பயணம் செல்வதையும் விரும்புகிறவர். இவருக்குக் காஃபி மிகவும் பிடிக்கும். இவருடைய பொழுதுபோக்குகள், சமகாலப் பிரச்சனைகளைப் படித்து விவாதம் செய்வதில் ஆர்வம் மிக்கவர். சிங்கப்பூரிலுள்ள சீக்கியர் சமூகத்தால் மிகவும் விரும்பப்படுகிறவர்.
 

  • Facebook
  • Instagram
  • LinkedIn

© 2020 by Yeo Perumal Mohideen Law Corporation. Singapore UEN No.200414768C