முகம்மது அஷ்ரஃப்

S/O சையத் அன்சராய்

சட்டப் பயிற்சி பெறுபவர்

முகம்மது அஷ்ரஃப், டாஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து (ஆஸ்திரேலியா) இளநிலைச் சட்டப் பட்டத்தைப் பெருமை நிலையுடன் பெற்றார், தரநிலை அடிப்படையில் தன்னுடைய பிரிவின் மிகச் சிறந்த 10% பேரில் இடம் பெற்றார். வழக்காடலில் தன்னுடைய பேரார்வத்தைப் பின்பற்றும் அஷ்ரஃப், பல்கலைக்கழகத்தில் குறிப்பிடக்கூடிய நேரத்தைச் செலவிட்டுப் பல விவாதங்களில் பங்கேற்று, அதன்மூலம் ஒரு வழக்காடுபவராகத் தன்னுடைய திறமையை மெருகேற்றிக்கொண்டார்.

 

பயிற்சியின்போது, அஷ்ரஃப் குற்றவியல் சட்டம் மற்றும் குடிமையியல் சட்டத்தில் அனுபவம் பெற்றுள்ளார், அவருடைய பணிகளில் பலவும் தனிப்பட்ட காய வழக்கில் கவனம் செலுத்துகின்றன. வருங்காலத்தில் ஒரு நல்ல வழக்காடுபவராகவேண்டும் என்று அஷ்ரஃப் நம்புகிறார், அத்துடன், வணிக வழக்காடல் மற்றும் அனுப்புதலுக்கான தன்னுடைய பேரார்வத்தைப் பின்பற்ற விரும்புகிறார்.

 

தொழில்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முயற்சிகளுடன் தொடர்புடைய அடிப்படை சட்டப் பிரச்னைகளைக் கற்பதிலும் புரிந்துகொள்வதிலும் அவர் நிறைய நேரம் செலவிட்டுள்ளார். அஷ்ரஃப் தன்னுடைய சட்டப் பயணத்தைத் தொடங்குமுன், அவரே தொழில்களை இயக்குவதில் பங்கேற்றுள்ளார். பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, டாஸ்மானியாவின் விருந்தோம்பல் தொழில்துறையில் ஒரு மேற்பார்வையாளர் பொறுப்பில் அஷ்ரஃப் பணியாற்றியும் உள்ளார், தங்களுடைய தொழில்கள் அல்லது பணியுடன் தொடர்புடைய சட்டப் பிரச்னைகளைச் சமாளிப்பதில் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நன்றாக உதவுவதற்கான வாழ்க்கைத் திறன்களை இது அவருக்கு வழங்கியுள்ளது.

 

பணிக்கு வெளியில், நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புகிறவர் அஷ்ரஃப். உணவில் மிகுந்த விருப்பம் கொண்டவர். பயணம் செய்வதில், வெவ்வேறு பண்பாடுகளை ஆராய்வதில், அனுபவிப்பதில் இவர் விருப்பம் கொண்டவர். அஷ்ரஃப் ஆங்கிலம் மற்றும் தமிழைச் சரளமாகப் பேசுகிறவர்.

  • Facebook
  • Instagram
  • LinkedIn

© 2020 by Yeo Perumal Mohideen Law Corporation. Singapore UEN No.200414768C