சிந்துபைரவி

த/பெ பன்னீர் செல்வம்

வக்கீல்

சிந்து, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திலிருந்து (UK) இளநிலைச் சட்டப் பட்டத்தைப் பெருமை நிலையுடன் பெற்றார், 2019 ஆகஸ்டில் சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞராக அனுமதிக்கப்பட்டார். யியோ பெருமாள் மொஹிதீன் சட்ட நிறுவனத்தில் ஒரு சட்ட அலுவலராகச் சேர்வதற்குமுன், சிந்து இந்த நிறுவனத்துடன் தன்னுடைய பணிபுரிதல் பயிற்சி ஒப்பந்தத்தின்கீழ் சேவையாற்றியுள்ளார்.

 

சிந்துவின் முதன்மைப் பணி பொதுக் குடிமையியல் வழக்குகள் ஆகும், இவர் தனிப்பட்ட காயக் கோரிக்கைகளில் கவனம் செலுத்துகிறார். எங்களுடைய பல முக்கிய வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார். உயர்நீதிமன்ற முறையீடுகளிலும் உதவியுள்ளார். ஒப்பந்தம் சார்ந்த மற்றும் திருமண முரண்கள் போன்ற பிற சட்டப் பகுதிகளிலும் இவர் வாடிக்கையாளர்கள் சார்பாகச் செயல்பட்டு, அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

தனது துடிப்பான ஆளுமையின்மூலம் சிந்து எங்கள் நிறுவனத்திற்கு நேர்ச் சிந்தனையாளராகப் பணியாற்றிவருபவர். எங்கள் நிறுவனத்தின் பயிற்சிநிலை ஊழியர்களுக்கும் இவர் வழிகாட்டியாகச் சிறந்த தலைமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறவர்.

 

சிந்து ஆங்கிலம் மற்றும் தமிழைச் சரளமாகப் பேசுகிறவர். சிந்து தன்னுடைய ஓய்வு நேரத்தில் படம் பார்ப்பதையும் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவதையும் விரும்புபவர்.

  • Facebook
  • Instagram
  • LinkedIn

© 2020 by Yeo Perumal Mohideen Law Corporation. Singapore UEN No.200414768C